ஐபிஎல்: பெங்களுருக்கு 174 ரன்கள் இலக்கு...!

  டேவிட்   | Last Modified : 13 Apr, 2019 09:53 pm
ipl2019-punjab-sets-bengaluru-174-for-win

இன்றைய ஐபிஎல் தொடரில் பெங்களுரு அணிக்கு 174 ரன்கனை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் அணி. 

ஐபிஎல் போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில், ராயல்ஸ் சாலன்ஞ்சர்ஸ் ஆப் பெங்களுரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற பெங்களுரு அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் அணியின் ராகுல், கிறிஸ் கேலே ஆகியோர் களம் இறங்கினார். கிறிஸ் கேலே அதிராடி ஆட்டத்தில் 4 ஓவரில் 26 ரன்களை எடுத்தது.  ஆனால் வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார் ராகுல். இதனையடுத்து மாயங்க் அகர்வால் களம் இறங்கினார்.  மாயங்க்  15 ரன்களில் அவுட் ஆனதால், கிறிஸ் கேலேவுடன் சர்பராஷ்கான் ஜோடி சேர்ந்தார்.  கிறிஸ் அரை சதத்தை தாண்டிய நிலையில், 14வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்திருந்தது பஞ்சாப். 

கிறிஸ் கேலேவின் அபார ஆட்டத்தினால், 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து பெங்களுரு அணி களம் இறங்கவுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close