ஐபிஎல்: பெங்களுரு அணி அசத்தல் வெற்றி !

  டேவிட்   | Last Modified : 13 Apr, 2019 11:50 pm
ipl-bengaluru-beat-punjab

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில்.8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

டாஸ் வென்ற பெங்களுரு அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் அணியின் ராகுல், கிறிஸ் கேலே ஆகியோர் களம் இறங்கினார். கிறிஸ் கேலே அதிராடி ஆட்டத்தில் 4 ஓவரில் 26 ரன்களை எடுத்தது.  ஆனால் வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார் ராகுல். இதனையடுத்து மாயங்க் அகர்வால் களம் இறங்கினார்.  மாயங்க்  15 ரன்களில் அவுட் ஆனதால், கிறிஸ் கேலேவுடன் சர்பராஷ்கான் ஜோடி சேர்ந்தார்.  கிறிஸ் அரை சதத்தை தாண்டிய நிலையில், 14வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்திருந்தது பஞ்சாப். 

கிறிஸ் கேலேவின் அபார ஆட்டத்தினால், 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து பெங்களுரு அணி களம் இறங்கியது. பர்திவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோடி சேர்ந்தனர். பர்திவ் பட்டேல் 19 ரன்களில் அவுட் ஆனதால், கோலியுடன் வில்லியர்ஸ்-உடன் தொடர்ந்தார். 

இந்நிலையில், 11வது ஓவரில் 37 பந்துகளில் கோலி அரை சதம் அடித்து அசத்தினார்.  அப்போது 54 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற நிலையில் பெங்களுரு அணி இருந்தது. 67 ரன்களுடன் விராட்கோலி ஆட்டமிழந்தார். இதனையடுத்து மார்க்கஸ் களம் இறங்கினார். 

இறுதியில் பெங்களுரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நிர்ணயிக்கப்பட்ட 174 ரன்களை எடுத்து பஞ்சாபை வீழ்த்தி வெற்றி பெற்றது. வில்லியர்ஸ் மற்றும் மார்க்கஸ் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close