தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு சொந்தங்களே! - 'தமிழ் புலவர்' ஹர்பஜன் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 01:41 pm
harbhajan-singh-wishes-to-tn-people-for-new-year

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது வழக்கமான பாணியில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழில்  ட்வீட் செய்துள்ளார். 

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற ஹர்பஜன் சிங், தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கெனவும் தனது பல்வேறு கருத்துகள் மற்றும் வாழ்த்துகளை தமிழில் ட்வீட் செய்து வந்தார். இதனால் தமிழகத்தில் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்று கூறலாம். கடந்த ஒரு வருடமாக அவர் எந்த ஒரு தமிழ் பண்டிகையானாலும் தமிழில் ட்வீட் செய்து வழக்கம். அதன்படி, இன்று தமிழ் பபுத்தாண்டை முன்னிட்டு, தனது வழக்கமான பாணியில் மோனை, எதுகையுடன் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "பாசமும்,நேசமும் இனிதோடு, நாளைய சூரியவிடியலின் துணையோடு, பல வெற்றிப்படிகளின் கனவோடு, கல்வியும் கலையும் அறிவோடு,உண்மையும் உழைப்பும் உயிரோடு,உறுதிமிகு தமிழா விழிப்போடு,நாளைய உலகம் வெல்க துணிவோடு. தமிழோடும்,தமிழரோடும் உறவாடு!நல் உறவோடு! வாழ்த்துக்கள் அன்பு சொந்தங்களே!" என்று பதிவிட்டுள்ளார். 

— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 14, 2019

மேலும், தமிழர் போன்று நெற்றியில் விபூதியுடன் இருக்கும் ஹர்பஜனின் இந்த புகைப்படமும் இன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close