சென்னை அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா !

  டேவிட்   | Last Modified : 14 Apr, 2019 05:45 pm
ipl2019-kolkatta-sets-chennai-162-for-win

இன்றைய ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில், சென்னை அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது, கொல்கத்தா அணி.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.

கொல்கத்தா அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 4.5 ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சுனில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கிறிஸ் லின்னுடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார்.  இந்நிலையில், கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் 8.5 ஓவரில் 36 பந்துகளில் அரை சதம் அடித்த அசத்தியுள்ளார். நிதிஷ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, 10.2 ஓவரில், 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை எடுத்திருந்தது கொல்கத்தா அணி. 

நிதிஷ் வெளியேறியதையடுத்து, கிறிஸ் லின்னுடன் ராபின் உத்தப்பா ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் ராபின் ரன் எதுவும் எடுக்காமலேயே அவுட் ஆனார். பின்னர் கிறிஸ் லின்னுடன், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கிறிஸ் லின் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 82 ரன்களில் ஆட்டமிழ்நதார். பின்னர் ஆட்டத்தை ஆண்ட்ரு ருசல் தொடர்ந்தார். முதல் மூன்று பந்துகளில் 1 சிக்கர் 1 ஃபோர் உத்வேகத்துடன் ஆடியும், இந்த பத்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

பின்னர் தினேஷ் கார்த்திக்குடன், கில் ஜோடி சேர்ந்தார். 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்திருந்தது கொல்கத்தா அணி. 

இறுதியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 161 ரன்களை எடுத்தது. 

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தற்போது சென்னை அணி களம் இறங்கியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close