5 பந்துகளில் 16 ரன்கள்: வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜா!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 07:46 pm
jadeja-rocks-chennai-won-the-match

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணி, இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில், 5 பந்துகளில், 16 ரன்கள் எடுத்த ஜடேஜா, சென்னையின் வெற்றிக்கு வித்திட்டார். 

இன்றைய போட்டியின் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரின் முதல் பந்தை ரெய்னா எதிர்கொண்டு, சிங்கிள் தட்டினார். அடுத்து பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா, அடுத்தடுத்து 3 பவுன்டரிகள் அடித்தார். பின் இரண்டு ரன்கள் மற்றும் கடைசி பந்தில் ஒரு ரன் என, 5 பந்துகளில், 16 ரன்கள் எடுத்தார் ஜடேஜா. 

இதன் மூலம் வெற்றிக்கு தேவையான இலக்கு வெகுவாக குறைந்தது. கடைசி நேரத்தில் ஜடேஜா வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தால், சென்னை அணி, மிக எளிதாக வெல்ல முடிந்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close