உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 12:48 pm
australia-squad-for-icc-world-cup-2019

12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விபரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் எதிர்பார்த்தபடியே ஸ்மித், வார்னர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில், வருகிற மே 30ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

முதலில் இந்த 10 அணிகளும், மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் லீக் போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து, முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் இடையே அரையிறுதி போட்டி நடைபெறும். அதில் இருந்து இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் மோதும். அதன்படி, ஜூலை 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அரையிறுதி போட்டிகளும், ஜூலை 14ம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  நிலையில், இன்று ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விபரம்: 

ஆரோன் பின்ச்(கேப்டன்), ஜேசன் பெக்ரெண்டாப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்டர்-நைல், பேட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜி ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்ச்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் சம்பா ஆகிய 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய இந்திய அணி குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close