ராகுல் டிராவிட் தேர்தலில் வாக்களிக்க முடியாது... ! ஏன் தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 15 Apr, 2019 01:33 pm
rahul-dravid-won-t-vote-in-lok-sabha-election-2019

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி 'ஏ' பிரிவின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் தனது சகோதரர் குடும்பத்தினருடன் டிராவிட் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரும், அவரது மனைவியும் தனியாக அஸ்வந்த் நகருக்கு குடியேறினர். 

இந்த நிலையில், டிராவிட் மற்றும் அவரது மனைவியின் பெயரை நீக்கக் கோரி, டிராவிட்டின் சகோதரர் விஜய், தேர்தல் அதிகாரியிடம் 'படிவம் 7' கொடுத்திருக்கிறார். அதன்படி தேர்தல் அதிகாரிகளும், நேரடியாக வந்து பழைய முகவரியை சரிபார்த்துவிட்டு, டிராவிட் மற்றும் அவரது மனைவி பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர்.  

பின்னர், வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர்களை சேர்க்க, அஷ்வந்த் நகரில் தற்போதுள்ள தமது வீட்டின் முகவரியை வைத்து, டிராவிட் 'படிவம் 6' யை அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் படிவத்தை அளிக்கத் தவறிவிட்டார். மேலும், அதிகாரிகளும் இதுதொடர்பாக அவரது வீட்டிற்கு சென்றபோது, டிராவிட் வெளிநாட்டில் இருந்துள்ளார். இதனால் அதிகாரிகள் திரும்பி சென்றுவிட்டனர். 

இதனால் வருகிற ஏப்ரல் 18 -ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், ராகுல் டிராவிட் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநில தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக டிராவிட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close