தினேஷ் கார்த்திக் உள்ளே; ரிஷப் பன்ட் வெளியே: எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம்

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Apr, 2019 07:50 pm
dinesh-karthik-in-rishab-bant-out-msk-prasad-description

ரிஷப் பன்ட்டை விட, தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால், உலக கோப்பை கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள, 2019 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட அணி வீரர்களை தேர்வுக் குழுத்தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அறிவித்தார்.

இந்த அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மானனும் ஆன, ரிஷப் பன்ட் இடம் பெறவில்லை. இது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான அணியில், ரிஷப் பன்ட் இடம்பெறாதது குறித்து, தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த விளக்கத்தில், ’ரிஷப் பன்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரர்.  தோனிக்கு காயமோ அல்லது ஓய்வு தேவைப்படும்  பட்சத்தில், அவருக்கு பதிலாக, விக்கெட் கீப்பீங் செய்வதற்காகவும், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

மேலும், மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு, அம்பத்தி ராயுடுவிற்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டதால், அவருக்கு அணியில் கிடைத்துள்ளது என்றும் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close