ஐபிஎல்: டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டம்...மும்பைக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு..!

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Apr, 2019 10:01 pm
ipl-bangalore-172-runs-target-mumbai

மும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது. 

முன்னதாக, டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்ய பெங்களூரு அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி, பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோலி (8ரன்), பெர்கண்டார்ப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இதைத் தொடர்ந்து, டிவில்லியர்ஸ் களமிறங்கினார். பார்த்தீவ் பட்டேலும் 28 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த மொயின் அலி, டிவில்லியர்சுடன் ஜோடி சேர்ந்து, இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் அரைசதமும் அடித்தனர். 

பின்னர் மொயின் அலி அவுட் ஆக, நன்றாக ஆடிக் கொண்டிருந்த டிவில்லியர்சும் தேவையில்லாமல் ரன் அவுட் (ஆக்கப்பட்டார்) ஆகினார். கடைசி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை இழந்தது பெங்களூரு அணி.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்த பெங்களூரு அணி, மும்பை அணிக்கு வெற்றி இலக்காக 172 ரன்களை நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (சிக்ஸர் 4, பவுண்டரி 6), மொயின் அலி 50 ( சிக்ஸர் 5,பவுண்டரி 1) ரன்கள் அடித்தனர். மும்பை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி விளையாடி வருகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close