விரக்தியில் விஜய் ஷங்கரை சூசக விமர்சனம் செய்த அம்பதி ராயுடு!

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 10:26 am
ambati-rayudu-ordered-3-d-glasses-to-watch-the-world-cup

உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத விரக்தியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தேர்வாகியுள்ள விஜய் ஷங்கரிடம் தனது ஆதங்கத்தை சூசகமாக காட்டியுள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று மும்பையில் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழக வீரர்கள் விஜய் ஷங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றனர். 4வது வீரராக அம்பதி ராயுடு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக விஜய் ஷங்கர் அணியில் இடம்பெற்றுள்ளார். 

இதுகுறித்து அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "விஜய் ஷங்கர் நன்றாக பேட்டிங் செய்வார். வானிலை மேகமூட்டமாக இருந்தாலும் நன்றாக பவுலிங் செய்வார். மேலும் அவர் ஒரு பீல்டர். அவரின் முப்பரிமாணத்தை (3-டி) கருத்தில் கொண்டு தான் நாங்கள் விஜய் ஷங்கரை தேர்வு செய்தோம்" என்று விளக்கமளித்தார். 

இந்நிலையில் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத விரக்தியில் அம்பதி ராயுடு சூசகமாக விஜய் ஷங்கரிடம் தனது ஆதங்கத்தை காட்டியுள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காக இப்போது தான் புதிய 3-டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close