உலகக்கோப்பை கிரிக்கெட் :  மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்! 

  கிரிதரன்   | Last Modified : 17 Apr, 2019 10:43 pm
ambati-rayudu-rishabh-pant-among-india-s-standbys-for-icc-world-cup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் மாற்று வீரர்கள் (காத்திருப்போர் பட்டியல்) பட்டியலில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில்  மே மாதம் 30 -ஆம் தேதி தொடங்கவுள்ள ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் மாற்று வீரர்களுக்கான பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக இப்பட்டியலில் கலீல் அகமது, அவிஷ் கான், தீபக் சாஹர்  ஆகிய பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

போட்டி தொடர் நடைபெற்று வரும்போது,  அணி வீரர்களுக்கு எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு அல்லது காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்களுக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close