ஐபிஎல்: சென்னையை வீழத்தியது ஐதராபாத் !

  டேவிட்   | Last Modified : 17 Apr, 2019 11:25 pm
ipl2019-hyderabad-beat-chennai

ஹைதராபாத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 16.5  ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்து ஐதரபாத் அணி வெற்றி பெற்றது. 

தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை அணியின் தற்காலிக கேப்டனாக ரெய்னா நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற ரெய்னா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசஸ், வாட்சன் களமிறங்கினர். இவர்கள் சீரான இடைவெளியில் ரன்களை குவித்து வந்தனர். 10.5 ஓவரில் தான் முதல் விக்கெட் விழுந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 79 ஆக இருந்தது. வாட்சன்(31 ரன்)  நதீமின் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

சிறிது நேரத்திலேயே டுபிளிசஸ்சும் விஜய் சங்கர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த சென்னை அணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. ரஷித் கானின் ஒரே ஓவரில் 2 (ரெய்னா, ஜாதவ்) விக்கெட்டுகள் விழுந்தன. பில்லிங்கிஸூம் டக் ஆவுட் ஆனார். 

இவர்களுக்கு அடுத்து ராயுடு, ஜடேஜா  ஏதோ கொஞ்சம் விளையாடியதால், 20 ஓவர்களின் முடிவில், சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது.

133 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு, ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பெர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டேவிட் வார்னர் அரைசதம் அடித்து அவுட் ஆனார். வில்லியம்சன் வெறும் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 11 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்களை எட்டியது ஐதராபாத் அணி.

இறுதியில் 16.5  ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்து ஐதரபாத் அணி வெற்றி பெற்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close