டெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு

  ராஜேஷ்.S   | Last Modified : 18 Apr, 2019 10:01 pm
mumbai-169-runs-target-delhi

டெல்லியில் நடைபெற்று வரும் மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், டெல்லி அணி வெற்றி பெற 169 ரன்கள் மும்பை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் ( 6.1 ஓவருக்கு) 57 ஆக இருந்த போது, மிஸ்ரா பந்துவீச்சில் ரோகித் ஷர்மா (30 ரன்) போல்ட் ஆனார்.

இதற்கடுத்து வந்த பென் கட்டிங் 2 ரன்களில் வெளியேற, சிறிது நேரத்தில் டி காக்கும் ரன் அவுட் ஆனார். சூர்யா குமார், குர்னால் பாண்ட்யா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் மும்பை அணியின் ஸ்கோர் மெதுவாகவே ஏறியது. சூர்யகுமாரும் அவுட் ஆன பிறகு, பாண்ட்யா பிரதர்ஸ் அதிரடியாக ரன்களை ஏற்றினர். 15 பாலில் 3 சிக்ஸர்களை அடித்து 32 ரன் எடுத்த ஹர்திக் பாண்ட்யா ரபாடா பந்துவீச்சில் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்னால் பாண்ட்யா 37* ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close