உலகக்கோப்பை தொடரில் தோனி விளையாடுவது இந்திய அணிக்கு பக்கபலம் : விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2019 03:11 pm
india-fortunate-to-have-ms-dhoni-behind-stumps-says-virat-kohli

உலகக்கோப்பை தொடரில் தோனி விளையாடுவது இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, 2011 உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் என்று அனைவரும் அறிந்ததே. தோனி ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, 2019 உலகக் கோப்பை போட்டிகளிலும் அவர் இடம்பெற்றுள்ளார். 

2019 உலகக்கோப்பை போட்டித் தொடர் வருகிற மே மாதம் 30ம் தேதி, இங்கிலாந்தில் தொடங்குகிறது. முதலாவதாக, ஜூன் 5 -ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இதுதொடர்பாக, தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில், "உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தோனி இடம் பெற்றுள்ளது, இந்திய அணிக்கு பெருமை என்று கருதுகிறேன். அவர் ஒரு பேட்ஸ்மேன் என்பதைத் தாண்டி, நீண்டகாலமாக விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். எனவே, ஸ்டம்புக்கு பின்னால் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும்.

அவர் இதுவரை, சர்வதேச அளவில் 341 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,500 ரன்கள் எடுத்துள்ளார். போட்டியில் முதலாவது பந்தில் இருந்து 300வது பந்து வரை என்ன நடக்கும் என்பதை தெளிவாக அறிந்தவர். அவர் ஸ்டம்புக்கு பின்னால் இருப்பதை நான் இந்திய அணிக்கு மிகவும் பக்கபலமாக கருதுகிறேன். 

அவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், அதற்கெல்லாம் தனது திறமைகளால் அவர் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார். பல்வேறு சமயங்களில் பொறுமையாக இருந்து வெற்றியும் கண்டுள்ளார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுகொண்டுள்ளேன்.  

மைதானத்திற்கு உள்ளே என்ன நடக்கும் என்பதை நானும், தோனியும் நன்றாகவே அறிவோம். நான் எந்த சூழ்நிலையில் எந்த இடத்தில் இருப்பேன் என்று அவருக்கு தெரியும். வழக்கமாக ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் தோனி மற்றும் ரோஹித்துடன் ஆலோசனை மேற்கொள்வேன். கண்டிப்பாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன்.

இந்திய அணியில் கே.எல் ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது இந்திய அணிக்கு மேலும் பலம் தான். இந்திய அணியில் சில வீரர்களை தேர்ந்தெடுப்பதில் பல ஆலோசனைகள் நடைபெற்றன. இறுதியாக, விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர் என்ற அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைவிட ஒரு சிறப்பான அணி இருக்க முடியாது" என்று கோலி தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close