ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு

  ராஜேஷ்.S   | Last Modified : 20 Apr, 2019 06:00 pm
ipl-mumbai-162-runs-target-rajastan

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி. 

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கி மும்பை அணி விளையாடியது. ரோகித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார், டி காக் நிதானமாக ஆடினர். 13 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.  

சூர்யகுமார் 33 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த டி காக்கும் (65 ரன்) அவுட் ஆனார். பின்னர் வந்த பொல்லார்ட் (10 ரன்), ஹர்திக் பாண்ட்யா (23 ரன்) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close