'சிங்கத் தமிழன்; சங்கத் தமிழன்' - சிலம்பம் சுற்றும் ஹர்பஜன் சிங்!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 08:24 pm
harbhajan-singh-in-vairal-video

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற ஹர்பஜன் சிங், தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கெனவும் பல்வேறு ட்வீட்களை பதிவு செய்து வந்தார். எந்த ஒரு தமிழ் பண்டிகையானாலும் அவர் தமிழில் ட்வீட் செய்து அசத்துவது வழக்கம். இதனால் தமிழகத்தில் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. சமீபத்தில் கூட, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இதையடுத்து, அவர் தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் ஒன்றான சிலம்பம் சுற்றுவது போன்ற வீடியோவை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ஹர்பஜன் சிங் வேட்டி கட்டிக்கொண்டு, முதலில் ஒரு கையில் சிலம்பம் சுற்றுகிறார். அதைத்தொடர்ந்து இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close