ஐபிஎல்: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

  முத்து   | Last Modified : 20 Apr, 2019 08:05 pm
rajastan-beat-mumbai

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

மும்பை அணி நிர்ணயித்த 162 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, சாம்சன் களமிறங்கினர். ரஹானே 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த ஸ்மித், சாம்சனும் ஜோடி சேர்ந்து நிலையான ஆட்டதை வெளிப்படுத்தினர். 

சாம்சன் 35, ஸ்டோக்ஸ் டக் ஆவுட் ஆகி நிலையில், பின்னர் வந்த பாரக் அதிரடியாக ஆடினார். அவர் 29 பாலில் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட்டை பறிகொடுக்காமல் அபரமாக ஆடிய கேப்டன்  ஸ்மித் அரைசதம் அடித்தார்.

கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், மலிங்காவின் முதல் பாலிலேயே வெற்றி இலக்கை அடைந்தது ராஜஸ்தான் அணி.
அதிகபட்சமாக ஸ்மித் 59 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close