பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 11:52 pm
delhi-won-the-match-against-punjab

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

முதலில் விளையாடி பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடி டெல்லி அணி வீரர்கள் துவக்கம் முதலே மிக நிதானமான ஆட்டத்தை கையாண்டனர். 

மெது மெதுவாக இலக்கை நோக்கி ஸ்கோரை உயர்த்திய டெல்லி அணி வீரர்கள், 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தனர். இதன் மூலம் இந்த போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற்றது. 

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால், இந்த வெற்றி கிடைத்ததாக, அவர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close