மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் சிஎஸ்கே !

  கிரிதரன்   | Last Modified : 21 Apr, 2019 04:44 pm
ipl-csk-vs-rcb-review

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்றிரவு 8 மணிக்கு பெங்களூரில் நடைபெற உள்ள போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோத உள்ளன.

இத்தொடரின் ஆரம்பத்தில் பெற்ற தொடர் தோல்விகளால் ஆர்சிபி அணி தடுமாறினாலும், இறுதியாக அந்த அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளில், இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக த்ரில் வெற்றியை பெற்றது.

அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலியும், மொயின் அலியும் பேட்டிங்கில் மிரட்டினர். இருவரும் பேட்டிங்கில் நல்ல ஃபாமிற்கு திரும்பியிருப்பதும், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் அணிக்கு திரும்பியுள்ளதும், பெங்களூரு அணிக்கு வலுசேர்க்கும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இன்றைய போட்டியில் இந்த அணியில் மாற்றம் இருக்காது என்றே தோன்றுகிறது. அதேசமயம்,  ஏபி டி வில்லியர்ஸ் இன்று மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பிருக்கிறது. அப்படி திரும்பும்பட்சத்தில் சிஎஸ்கேவுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், ஹைதராபாத் அணியுடனான கடைசி போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளது. எனவே, அந்த தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு உள்ளது.

சென்ற போட்டியில் ஓய்வு காரணமாக விளையாடாத கேட்பன் தோனி, இன்றைய போட்டியில் அவசியம் விளையாட வேண்டும். தோனி அணியில் இடம்பெறும்பட்சத்தில், அவருடன்   சான்டரும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இதன் காரணமாக,  ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய லேகி,  கார்ன் சர்மா ஆகியோர் அணியிலிருந்து வெளியேற வேண்டிவரும்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம், பேட்டிங்கிற்கு கைகொடுக்கும் பிட்ச்சாகவே உள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் இங்கு நடைபெற்றுள்ள 3 போட்டிகளிலும் அணிகள் எடுத்துள்ள சராசரி ரன்கள் 180 ஆக உள்ளது. அதேசமயம், ஸ்பின், ஃபேஸ் பெளலிங் என இரு பிரிவு  பௌலர்களும் கலக்கும் வாய்ப்பும் இங்கு உண்டு.

நடப்பு ஐபிஎல் தொடரில், இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே, இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி கேட்பன் தோனி, டாஸ் வென்றால்,  அவர் முதலில் பௌலிங்கையே தேர்வு செய்ய வேண்டும். அதைவிட முக்கியமானது அவர் அதிரடியாக விளையாடுவதும், வாட்சனையும், ராயுடுவையும் இடம் மாற்றி களமிங்க வைப்பதும்.

சிஎஸ்கே, ஆர்சிபி இரு அணிகளுக்கும்  வெற்றி வாய்ப்பு சரிசமமாக உள்ள நிலையில், பெங்களூரு அணியை வென்று, இன்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே?!... வாங்க மேட்ச் பார்க்கலாம்...

- வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close