சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி : ஐபிஎல் ஃபைனல் சென்னையில் நடைபெறாது

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Apr, 2019 08:47 pm
ipl-final-shifted-chennai-to-hyderabad

ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி (ஃபைனல்) ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளே ஆஃப் சுற்றுகள், சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் 2018 தொடரில், ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணி வென்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருந்தது.

ஆனால், வழக்கு காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருக்கும்  I, J, K ஆகிய கேலரிகள் திறக்கப்பட்டால் மட்டுமே அங்கு இறுதிப்போட்டி நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த கேலரிகள் திறக்கப்படாமல் இருந்தால், இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வருவாய் குறைந்துவிடும் என்பதற்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், கேலரி விவகாரத்தில் இதுநாள்வரை முடிவு எட்டப்படவில்லையென தெரிகிறது.

இதையடுத்து, ஐபிஎல் இறுதிப் போட்டி, ஹைதராபாத்தில் நடைபெறும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,  ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் சென்னையிலும், விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close