ரஹானே சதம்... டெல்லிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு !

  முத்து   | Last Modified : 22 Apr, 2019 10:11 pm
rajastn-192-runs-target-delhi

ஜெய்ப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, சாம்சன் களமிறங்கினர். ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே சாம்சன் டக் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து வந்த கேப்டன் ஸ்மித், ரஹானே ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் டெல்லி பவுலர்கள் திணறினார்கள். அரைசதம் அடித்த ஸ்மித் அக்ஸர் பந்துவீச்சில் அவுட் ஆனார். 2வது விக்கெட்க்கு இந்த ஜோடி 72 பந்துகளில் 130 ரன்கள் சேர்த்தது.

பின்னர், ஸ்டோக்ஸ் 8, ட்ர்னர் டக் அவுட், பின்னி 19 ரன்கள் எடுத்து வெளியேறினர். இருப்பினும் அபராமாக ஆடிய ரஹானே,  ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை அடித்தார். 

20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 சேர்த்தது. 192 ரன்கள் வெற்றி இலக்குடன் டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹானே 63 பந்துகளில் 105* ரன்கள் ( சிக்ஸ் 3, பவுண்டரி 11), ஸ்மித் 32 பந்துகளில் 50 ரன்கள் அடித்தனர். டெல்லி அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close