ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூடியது டெல்லி அணி!

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 11:38 pm
delhi-capitals-won-the-match-agaist-rajastan-royals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள், துவக்கம் முதலே, அதிரடியுடன் கூடிய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

அந்த அணியின் ஷிகர் தவான், 54 ரன்கள் எடுத்தார். பிருத்வி ஷா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி அரைசதம்  கடந்தார். 

19.2 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து டெல்லி அணி வெற்றி பெற்றது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close