ஹைதராபாத்தை பழிதீர்க்குமா சிஎஸ்கே?

  முத்து   | Last Modified : 23 Apr, 2019 03:51 pm
csk-vs-srh-preview-ans-prediction

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 41-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) , வில்லியம்ஸன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹைதராபாத், பெங்களூரு அணிகளிடம் தோல்வியை தழுவியதையடுத்து, இதுநாள்வரை புள்ளிகள் பட்டியலில்  முதலிடத்தில் இருந்த சென்னை அணி, தற்போது 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இன்றைய போட்டியில் வென்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை சிஎஸ்கே உறுதி செய்ய முடியும்.

இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தால் 140 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு தொடரில் இதுவரை குறைவாக ஸ்கோர்களே எடுக்கப்பட்டுள்ளன. சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதமாக உள்ளதால், வழக்கம்போலவே சுழற்பந்து வீச்சாளர்கள் அனுபவித்து பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துவர் என நிச்சயமாக நம்பலாம்.

ஆனால், சென்னை அணியில் தோனியை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லை. அதேசமயம், நடப்பு தொடரில் ஹைதராபாத் அணியின் பவுலர்களின் பந்துவீச்சு நன்றாக உள்ளது. எனவே, அவர்களின் பந்துவீச்சை சமாளிக்க, சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் கடினமாக போராட வேண்டிவரும். சென்னை அணியில் ரெய்னாவை வெளியில் உட்காரவைத்துவிட்டு, முரளி விஜய், துருவ் சோரே, ஹர்பஜன்சிங் ஆகியோரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும்.

ஒருவேளை ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தால் 140 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே சென்னை அணியை சமாளிக்க முடியும். அந்த அணியில் வார்னர், பேர்ஸ்டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 முறை 100 ரன்களை சேர்த்துள்ளனர். இவர்களை தவிர மற்ற வீரர்கள் சொல்லும்படி இதுவரை ஜொலிக்கவில்லை.

சென்னை, கொல்கத்தா அணிகளை வீழ்த்திய தொம்புடன் ஹைதராபாத் அணியும், நடப்பு தொடரில் உள்ளூரில் விளையாடி தோல்வியை சந்திக்காத பலத்துடன் சென்னை அணியும் வெற்றியை தனதாக்கிக் கொள்ள விளையாடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

- வி.இராமசுந்தரம் -

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close