மணீஷ் பாண்டே அருமையான ஆட்டம்: சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்கு

  முத்து   | Last Modified : 23 Apr, 2019 09:53 pm
176-runs-target-chennai

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், சென்னை அணி வெற்றி பெற 176 ரன்கள் இலக்காக ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து,  ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பேர்ஸ்டோவ் களமிறங்கினர். அபாயகரமான இந்த ஜோடியை ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே பிரித்துவிட்டார் ஹர்பஜன் சிங்.

அப்படா... இவர்களை பிரித்துவிட்டோம் என்று நினைத்தால், அடுத்து அந்த மனிஷ் பாண்டேவுக்கு என்ன ஆனது தெரியவில்லை ஒரே அதிரடி ஆட்டம் தான். வார்னர் ஒரு பக்கம் அடிக்க, அவரை முந்திக்கொண்டு பாண்டே அரைசதம் அடித்தார். இவரைத்தொடர்ந்து, வார்னரும் அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது.

வார்னர் 57 ரன்கள் எடுத்திருந்த போது, ஹர்பஜன் வீசிய பாலை அடிக்க முடியாமல், அவரை தோனி ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் தொடக்கத்தில் அதிரடியாக ஆடினார். ஆனால், அவரை வைத்தே சென்னை பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர். 20 பாலில் 26 ரன் எடுத்திருந்த சங்கரை சாஹர் காலி செய்தார். 

20 ஓவர்களின் முடிவில்  ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்து,  சென்னை அணி வெற்றி பெற 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் அபாரமாக ஆடிய மணீஷ் பாண்டே 49 பாலில் 83 ரன்கள் அடித்தார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close