ஐபிஎல் : டிக்கெட் வாங்க குவியும் ரசிகர்கள் !

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 04:51 pm
ipl-ticket-sales-begin-in-chennai

சென்னை சேப்பாக்கத்தில், சென்னை - மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை சற்றுமுன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஹைதராபாத் அணிக்கு எதிராக, சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி, நாளை மறுநாள் (ஏப்.26) சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான டிக்கெட்கள் விற்பனை இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் அணியான சிஎஸ்கே விளையாடவுள்ள மற்றொரு ஆட்டம் என்பதால்,  ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் டிக்கெட்களை வாங்கி செல்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close