ஐதராபாத்திடம் அடிபணிந்தது பஞ்சாப் அணி!

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2019 11:48 pm
ipl-srh-won-the-match-against-kxip

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. 

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, அதிரடியாக விளையாடி, 212 ரன்கள் எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய பஞ்சாப் அணி வீரர்கள், ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டனர். 

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்ததால், அந்த அணி வீரர்களுக்கு ரன் குவிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 


இதையடுத்து, அந்த அணி ஐதராபாத் அணியிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close