கிறிஸ் கெயிலுக்கு புதிய பொறுப்பு!

  கிரிதரன்   | Last Modified : 07 May, 2019 02:23 pm
chris-gayle-named-vice-captain-of-windies-world-cup-team

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில், கிறிஸ் கெயிலுக்கு  துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐஐசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள், இங்கிலாந்தில் வரும் 30 -ஆம் தேதி தொடங்கி ஜூலை 14- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

உலகக் கோப்பை போட்டிகளில் பங்கு பெறவுள்ள 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.  ஜெசன் ஹோல்டர் தலைமையிலான இந்த அணியில் ஆன்ட்ரூ ரஸல், டாரன் பிராவோ, நிகோலஸ் பூரன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கிறிஸ் கெயிலுக்கு, துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அயர்லாந்து, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தற்போது பங்கேற்கு வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணைக் கேப்டனாக ஷாய் ஹோப் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close