ஐபிஎல் முதல் ப்ளே ஆஃப்: 131 ரன்கள் மட்டுமே அடித்த சென்னை அணி

  ராஜேஷ்.S   | Last Modified : 07 May, 2019 09:30 pm
chennai-132-runs-target-mumbai

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் முதல் ப்ளே ஆஃப் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற 132 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, சென்னையின் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், டுபிளிசஸ் களமிறங்கினர்.

மும்பை அணியின் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டுபிளிசஸ் 6, ரெய்னா 5,வாட்சன் 10 ரன் என பெவிலியன் திரும்பினர். ராயுடு, விஜய் ஜோடி தடவி தடவி ரன்களை சேர்த்து வந்தனர். 

ஒரு கட்டத்தில் முரளி விஜய்யும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 12.1 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளுக்கு 65 என இருந்தது. அதன் பிறகு, தோனி களமிறங்கினார். இவரும், ராயுடுவும் அடித்து ஆட நினைத்தாலும் பந்து போக மாட்டேன் என்று அடம்பிடித்தது. அப்படி..இப்படி... ஆடி 18-வது ஓவரில் 100 ரன்களை சென்னை அணி கடந்தது.

மலிங்காவின் 19-வது ஓவரில் தோனியின் அதிரடி ஆட்டம் அவருக்கு கை கொடுத்தது. அந்த ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை தோனி பறக்கவிட்டார். பின்னர் 20-ஓவரை வீசிய பும்ராவின் முதல் பந்தை அடித்த தோனியின் பேட் அவரின் கை விட்டு நழுவ, பந்து இஷான் கிஷனிடம்  கேட்ச் ஆனது. தோனி..அவுட்....மைதானமே அமைதியானது.

ரிப்ளேயில் அது ’நோ’ பால் என தெரிந்த பின்னர், தோனி...தோனி...என ரசிகர்கள் சத்தம் காதை பிளந்தது... அதன்பிறகு என்னதான்  இருவரும் அடித்தாலும் கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் அடித்து, மும்பைக்கு வெற்றி இலக்காக 132 ரன்களை நிர்ணயித்துள்ளது. 

அதிகபட்சமாக ராயுடு 42*, தோனி 37* ரன்கள் அடித்தனர். மும்பை அணி தரப்பில் ராகுல் சாஹர் 2, க்ருணல் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close