சென்னையை வீழ்த்தி முதல் அணியாக ஃபைனலுக்கு சென்ற மும்பை அணி

  ராஜேஷ்.S   | Last Modified : 09 May, 2019 02:28 pm
ipl-playsoff-mumbai-beat-chennai

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் தகுதி சுற்றுப்போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக மும்பை அணி இறுதிப்போட்டிக்கு சென்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் ஷர்மா களமிறங்கினார்கள்.

ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய சாஹரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து டி காக்கின் விக்கெட்டை ஹர்பஜன் தூக்கினார். இதனால் வெற்றி பெற சென்னைக்கு வாய்ப்புள்ளது என நம்பிக்கை வந்தது. ஆனால், சூர்யகுமார், இஷான் கிஷன் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்தனர். 

14-வது ஓவரை வீசிய இம்ரான் தாஹீர் இஷான் கிஷன் , க்ருணல் பாண்ட்யா ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து சாய்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் சூர்யாகுமார் யாதவின் பொறுப்பான ஆட்டத்தால், 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் கொடுத்த இரு கேட்சுகளை ஒன்று விஜய், மற்றொன்று வாட்சன் நழுவிட்டனர். இந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். 

சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், முதல் அணியாக மும்பை இறுதிப்போட்டிக்கு சென்றது. மும்பை இறுதிப்போட்டிக்கு செல்வது இது 5-ஆவது முறையாகும்.

மும்பை வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சூர்யகுமார் யாதவ் 54 பாலில் 71 ரன்கள் அடித்தார்.

டெல்லி - ஹைதராபாத் அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள வெளியேற்றுதல் சுற்று போட்டியில் வெல்லும் அணியுடன் சென்னை அணி  மோதும். அதில் வெற்றி பெற்றால் சென்னை அணி ஃபைனலுக்கு செல்லும்.

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close