அதிரடி காட்டிய ஹைதராபாத் : டெல்லி அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 09:46 pm
ipl-dc-vs-srh

விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது போட்டியில், டெல்லி கேப்பிடள்ஸ் அணிக்கு, 163 ரன்களை வெற்றி இலக்காக ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ளது.

முன்னதாக, டாஸ் ஜெயித்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஹாவும், மார்ட்டின் குப்டிலும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இருப்பினும் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹா அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து, ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மனீஷ் பாண்டே, குப்டிலுடன் ஜோடி சேரவே, அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே  வந்தது. அதேசமயம், டெல்லி அணியின்  பௌலர்களும், அவ்வப்போது விக்கெட்டை எடுத்து, ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களின் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான குப்டில் அதிகபட்சமாக 36 ரன்களை எடுத்தார். மனீஷ் பாண்டே - 30,  கேன் வில்லயம்சன் -28, விஜய் சங்கர் -25 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்தனர்.

டெல்லி அணியின் கீமோ பால் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தப்படியாக, இஷாந்த் சர்மா 2 விக்கெட்களை சாய்த்தார். 163 ரன்கள் வெற்றி இலக்குடன் டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close