ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் 2-வது போட்டியில் டெல்லி த்ரில் வெற்றி !

  டேவிட்   | Last Modified : 08 May, 2019 11:26 pm
ipl-delhi-beat-hyderabad

விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது போட்டியில், டெல்லி கேப்பிடள்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

டாஸ் ஜெயித்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஹாவும், மார்ட்டின் குப்டிலும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இருப்பினும் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹா அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து, ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மனீஷ் பாண்டே, குப்டிலுடன் ஜோடி சேரவே, அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே  வந்தது. அதேசமயம், டெல்லி அணியின்  பௌலர்களும், அவ்வப்போது விக்கெட்டை எடுத்து, ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களின் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.

பின்னர், 163 ரன்கள் வெற்றி இலக்குடன் டெல்லி அணியின்  பிரித்வி ஷா, ஷிகார் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தவான் 17 ரன்களுடன் அவுட் ஆனதால், ஷ்ரேயாஷ் ஐயர், பரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் ஷ்ரேயாஷ் 8 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். 

10.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை எடுத்திருந்தது டெல்லி அணி. பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகியோர் தொடர்ந்தனர். பிரித்வி ஷா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் 12 பந்துகளுக்கு 12 ரன்கள் என்ற நிலை காணப்பட்டது. 

இறுதியில் 19.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து,  2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.  இதனையடுத்து வரும் 10ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், டெல்லி கேபிடல்ஸ் அணி மோதுகின்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close