சச்சின்... கோலி.. யாரு பெஸ்ட்? : சொல்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் !

  கிரிதரன்   | Last Modified : 10 May, 2019 10:29 pm
virat-kohli-vs-sachin-tendulkar-andrew-flintoff-gives-his-take-on-best-player-ever

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரில் யார் சிறந்த ஆட்டக்காரர் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு,  "விராட் கோலி தான் சிறந்த பிளேயர்" என்று, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் -ரவுண்டரான ஆண்ட்ரூ பிளின்டாஃப் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, " சச்சினை விட விராட் கோலி சிறந்த ஆட்டக்காரர் என்பது தான் என் கருத்து. அதேசமயம், சச்சினை பிற வீரர்களுடன் ஒருபோதும் ஒப்பிட முடியுமென கருதவில்லை. எது எப்படியோ, உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஆட்டத்தை காண அவரது ரசிகர்களை போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்" என்று பிளின்டாஃப் தெரிவித்துள்ளார்.

ஐஐசி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், வரும் 30 -ஆம் தேதி, இங்கிலாந்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close