ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய 'சிஎஸ்கேவின் சிங்கம்'!

  கிரிதரன்   | Last Modified : 14 May, 2019 04:29 pm
shane-watson-batted-through-bloodied-knee-in-ipl-2019-final-vs-mumbai-indians-harbhajan-singh

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் 2019 இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில்,  சிஎஸ்கே அணியின் சிங்கமான வாட்சன், 59 பந்துகளில் 80 ரன்களை விளாசி, தனியொருவனாக சென்னை அணியின் வெற்றிக்காக கடைசிவரை போராடியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால், அன்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பௌலிங் செய்தது. அப்போது, மும்பை அணி வீரர் அடித்த பந்தை பீல்டிங் செய்து தடுக்க மைதானத்தில் "டைவ்" அடித்தபோது, வாட்சனின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஃபைனல் மேட்ச் என்பதால், தமக்கு ஏற்பட்ட காயத்தை வாட்சன் பெரிதாக கருதாமல் தொடர்ந்து பீல்டிங் செய்துள்ளார். அத்துடன் காயம் தந்த வலியுடனே ரத்தம் சொட்ட சொட்ட ஆட்டத்தின் கடைசி வரை அவர் பேட்டிங்கும் செய்துள்ளார். இந்த அதிர்ச்சி தகவலை சிஎஸ்கே அணியின் சகவீரர் ஹர்பஜன் சிங், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஆட்டம் முடிந்த பின்னர் வாட்சனுக்கு ஏற்பட்ட காயத்துக்காக அவரது இடது முழங்காலில் ஆறு தையல்கள் போடப்பட்டன என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜனின் இத்தகவல், சிஎஸ்கே ரசிகர்களை ஒருபுறம் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், தமக்கு ரத்த காயம் ஏற்பட்டிருந்தபோதும், அதனை சற்றும் பொருட்படுத்தாமல் அணியின் வெற்றிக்காக சிறப்பாக போராடிய வாட்சனின் மனஉறுதியை எண்ணி, சிஎஸ்கே ரசிகர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close