உலகக்கோப்பையை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 18 May, 2019 10:09 am
icc-world-cup-2019-winner-to-take-home-4-mn-highest-amount-in-wc-history

12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத் தொகை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில், வருகிற மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

முதலில் இந்த 10 அணிகளும், மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் லீக் போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து, முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் இடையே அரையிறுதிப் போட்டி நடைபெறும். அதில் இருந்து இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் மோதும். அதன்படி, ஜூலை 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அரையிறுதி போட்டிகளும், ஜூலை 14ம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 28 கோடியும் (4 மில்லியன் டாலர்) இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு ரூ.14 கோடியும்  (2 மில்லியன் டாலர்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று லீக் சுற்றில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் ரூ.28 லட்சமும், லீக் சுற்றில் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் மற்றும் அரையிறுதிப் போட்டியில் வெளியேறும் அணிகளுக்கு ரூ.5.61 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளது. 

ஐசிசி வரலாற்றிலேயே இதுதான் அதிகமான பரிசு தொகை என்றும் கூறப்பட்டுள்ளது கடந்த முறை உலகக் கோப்பை வென்ற அணைக்கு ரூ. 26 கோடியும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விபரம்

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close