உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வது உறுதி: விராட் கோலி

  முத்து   | Last Modified : 21 May, 2019 07:43 pm
indian-team-will-win-the-world-cup-virat-kohli

உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வது உறுதி என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12-ஆவது உலகக்கோப்பை போட்டி வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. இதில், 10 அணிகள் இடம்பெறுகின்றன. ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 46 ஆட்டங்கள்  நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று இரவு இங்கிலாந்து செல்கிறது. அதற்கு முன்பாக மும்பையில் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கேப்டன் விராட் கோலி, ‘உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வது உறுதி. இந்திய ராணுவ வீரர்களுக்கு கோப்பையை அர்ப்பணிக்கப்போவது உறுதி. போட்டியின்போது உண்டாகும் அழுத்தத்தை சமாளிப்பது அவசியமாகும்’ என்றார்.

மேலும், இந்த உலக்கோப்பையில் அனைத்து அணிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடவேண்டிய உள்ளதால், கடந்த இரண்டு உலகக்கோப்பை காட்டிலும், இந்த உலகக்கோப்பை தொடர் சவாலானதாகவும், கடினமானதாகவும் இருக்கும் என்றும் கோலி கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close