உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி பேட்டிங்

  ராஜேஷ்.S   | Last Modified : 25 May, 2019 02:58 pm
world-cup-practice-match-indian-team-batting

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மற்றொரு பயிற்சி ஆட்டத்தில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி சவுதம்டனில் நடக்கவுள்ளது. இந்த இரு போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 3 தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close