உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்

  ராஜேஷ்.S   | Last Modified : 26 May, 2019 03:32 pm
world-cup-practice-match-india-all-out-for-179-runs

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி,  அந்த அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்களை நிர்ணயித்துள்ளது.

லண்டன் ஓவல்  மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினார்கள்.

ஆட்டத்தில் 2-வது ஓவரிலேயே போல்ட் பந்துவீச்சில் ரோகித் ஷர்மா (2 ரன்)  அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து கோலி களமிறங்கினார். இவர் வந்த பிறகுதான் முதல் பவுண்டரியே அடிக்கப்பட்டது. 

பின்னர், போல்ட்டின் சூறாவளி பந்துவீச்சில் தவான் 2, ராகுல் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, கோலியம் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், கோலி (18 ரன்)  கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 10.3 ஓவர்களுக்கு 39 ரன்கள் என இருந்தது.

இதையடுத்து, களமிறங்கிய தோனி நிலைமையை உணர்ந்து, ஆமை வேக ஆட்டத்தில் ஈடுபட்டார். ஒருபக்கம் ஹர்திக் பவுண்டரிகளும் விளாசினார். 

இதன்பிறகு ஹர்திக் 30, தினேஷ் கார்த்திக் 4, தோனி 17 ரன்கள் என அவுட் ஆகி பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 100 ரன்களையாவது எட்டுமா என்ற நிலையில் ஆட்டம் சென்றுக்கொண்டிருந்தது. ஆபத்பாண்டவனாக வந்த ஜடேஜா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து, அணி டீசண்ட்டான ஸ்கோர் எடுக்க உதவினார். இவருக்கு உதவியாக குல்தீப் யாதவும் நன்றாக விளையாடினார். 

பின்னர்  இந்திய அணி 39.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 50 பாலில் 54 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில்  போல்ட் 6.2 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து, 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, நியூசிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close