உலகக்கோப்பை : பரிதாபமாக ஆடிய பாகிஸ்தான்!

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 05:27 pm
world-cup-pakistan-all-out-for-105-runs

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
நாட்டங்ஹாமில் உள்ள  ட்ரென்ட் பிரிட்ஸ் மைதானத்தில் தற்போது  நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜசன் ஹோல்டர், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், பஹார் ஸமான் களமிறங்கினார்கள்.  இமாம் உல் ஹக் 2 ரன்னில் காட்ரெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபர் அஸாம் களமிறங்கினார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், ஸமானை ரசுல் போல்ட் ஆக்கினார். 

இதன் பிறகு களமிறங்கிய சொஹைல் 8, கேப்டன் சர்ஃபராஸ் அகமது 8, இமாத் வாசிம் 1 ரன் என வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். ஹோல்டர், தாமஸ் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டிருக்க, 100 ரன்களையாவது பாகிஸ்தான் அணி எட்டுமா என்று சந்தேகமாக இருந்தது.

வஹாப் ரியாஸ் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம் 100 ரன்களை கடந்த பாகிஸ்தான், முடிவில் 21.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 106 ரன்களை நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக பாபர் அஸாம் 22, பஹார் ஸமான் 22, வகாப் ரியாஸ் 16 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் தாமஸ் 4, ஹோல்டர் 3, ரசுல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close