நேற்று பாக்., இன்று இலங்கை: நியூசி., அபார வெற்றி

  முத்து   | Last Modified : 01 Jun, 2019 07:59 pm
worldcup-newzealand-win

உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

கார்டிப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 136 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

இதையடுத்து, இந்த எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் குப்தில், கோலின் முன்ரோ களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் நன்றாக ஆடினர். இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். 

முடிவில், 16.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. குப்தில் 51 பந்தில் 73 ரன்களும், முன்ரோ 47 பந்தில் 58 ரன்களும் அடித்தனர். 

இலங்கை அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய மாட் ஹென்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் குறைந்த ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, இலங்கையும் இன்று அதேபோல் படு தோல்வியை சந்தித்துள்ளது. 

 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close