பாக்., இலங்கையை விட ஆப்கான் மேல்: 207 ரன்களுக்கு ஆல்அவுட்

  ராஜேஷ்.S   | Last Modified : 01 Jun, 2019 09:56 pm
worldcup-afghanistan-207-allout

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 207 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

 பிரிஸ்டலில் தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற  ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்படின் நைப், தமது அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். 

இதையடுத்து, அந்த அணி தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ஷசாத், ஜஜாய் களமிறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஷசாத் ஸ்டார்க் பந்துவீச்சில் போல்ட் ஆகி, டக் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, ஜஜாய்யும் டக் அவுட் ஆனார்.

இதன்பிறகு, ரஹ்மத் ஷா, ஷாஹிடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், ஷாஹிடி 18 ரன்னிலும், ஷா 43 ரன்னிலும் அவுட் ஆகி, பெவிலியன் திரும்பியபோது, அணியின் ஸ்கோர் 19.2 ஓவர்களில் 75 ரன்கள் என இருந்தது. இருவரின் விக்கெட்டை ஜாம்பா வீழ்த்தினார். 

நபி 7 ரன்னில் ரன் அவுட் ஆன பிறகு, கேப்டன் குல்படின் நைப், ஜட்ரான் கூட்டுசேர்ந்து நன்றாக ஆடினர். நைப் 31 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, அரைசதம் அடித்த ஜட்ரானும்  நடையை கட்டினார். இருவரின் விக்கெட்டையும் ஸ்டொனியிஸ் வீழ்த்தினார்.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரஷித்கான், முஜீபுர் ரஹ்மான் பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடியாக ஆடி, தங்கள் அணி 200 ரன்களை கடக்க உதவினர்.

முடிவில், ஆப்கானிஸ்தான் 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 208 ரன்களை நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக ஜட்ரான் 51, ரஹ்மத் ஷா 43 ரன்கள் எடுத்தனர். ஆஸி., தரப்பில் கம்மின்ஸ், ஜாம்பா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து, இந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close