பாக்., இலங்கைக்கு சேர்த்து வைத்து ஆடிய வங்கதேசம் 330 ரன்கள் குவிப்பு

  முத்து   | Last Modified : 02 Jun, 2019 07:21 pm
worldcup-bangladesh-331-runs-target-southafrica

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓவலில் தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்ளஸ்சி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால்,  சர்கார் களமிறங்கினார்கள்.
இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திவிட்டு ஆட்டமிழந்தனர்.  இதையடுத்து, ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன், ரஹீம் நிலையாக நின்று அற்புதமாக விளையாடினர். இதனால் அந்த அணி 16 ஓவர்களில் 100,  32 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். 

பின்னர் ஒருவழியாக ஷாகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தி, இந்த ஜோடியை பிரித்தார் இம்ரான் தாஹீர். இந்த ஜோடி 142 ரன்களை குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய மிதுனையும் போல்ட் ஆக்கினார் தாஹீர். இவரைத்தொடர்ந்து, ரஹீமும் ஆந்தில் பந்துவீச்சில் வாண்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 42.1 ஓவர்களுக்கு 250 ரன்கள் என இருந்தது.

இதன்பிறகு, கடைசி நேரத்தில் மக்மதுல்லா அதிரடியாக ஆடி, வங்கதேசம் 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்து, தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 331 ரன்களை நிர்ணயித்துள்ளது. ஒரு நாள் போட்டியில் வங்கதேசத்தின் அதிகபட்ச ஸ்கோர் (330) இதுவாகும். அதிகபட்சமாக ரஹீம் 78, ஷாகிப் அல் ஹசன் 75, மக்மதுல்லா 46 ரன்கள் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி தரப்பில், இம்ரான் தாஹீர், ஆண்டில், மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா தற்போது விளையாடி வருகிறது.
 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close