உலகக்கோப்பை: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

  ராஜேஷ்.S   | Last Modified : 03 Jun, 2019 02:53 pm
worldcup-england-bowling

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  நாட்டிங்காமில் இன்று நடைபெறும் 5-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டிக்காக டாஸ் போடப்பட்டது.  இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் (கேப்டன்), ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி, வோக்ஸ், ஆர்ச்சர், ரஷீத், மார்க் வுட்.

பாகிஸ்தான்: பாக்கர் ஸாமன், இமாம் உல் ஹக், பாபர் அஷாம், ஹபீஸ், சர்ப்ராஸ் அகமத் (கேப்டன்), ஷோயிப் மாலிக், அஸிப் அலி, ஷாடப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமிர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close