இங்கிலாந்திடம் பலிக்குமா பாகிஸ்தானின் பாச்சா?

  கிரிதரன்   | Last Modified : 03 Jun, 2019 07:34 pm
worldcupcricket2019-eng-vs-pak-match-preview

உலகக்கோப்பை போட்டியின்  ஆறாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் இன்று மோதி வருகின்றன. நாட்டிங்ஹாம் நகரின் டிரன்ட் பிரிட்ஸ் மைதானத்தில் தற்போது இப்போட்டி நடைபெற்று வருகிறது.

இதே மைதானத்தில் தான் சில நாட்களுக்கு முன்பு, வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 105 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் -அவுட் ஆகி, படுதோல்வியை தழுவியது.

இதற்கு நேர்மாறாக, உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே, தென்னாப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தெம்புடன் இங்கிலாந்து இன்று களமிறங்கியுள்ளது. 

எனவே, இங்கிலாந்து அணியை இன்று வீழ்த்த வேண்டுமானால், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யும்பட்சத்தில் 330 -350 ரன்கள் எடுத்தே ஆக வேண்டும். அத்துடன், பாகிஸ்தான் வீரர்களின் பௌலிங்கிலும் அனல் பறக்க வேண்டும். அப்போதுதான் அந்த அணிக்கு இன்று வெற்றி சாத்தியமாகும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு, சாம்பியன்டிராஃபி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது, உலகக்கோப்பை போட்டிகளில் ஏற்கெனவே நான்கு முறை அந்த அணியை தோற்கடித்துள்ளது என பாகிஸ்தானுக்கு நம்பிக்கையூட்டும் ரெக்கார்டுகள் இருக்கதான் செய்கிறது. பார்ப்போம்... இன்று யார் வெல்கிறார்கள் என்று...

வி .ராமசுந்தரம் 

தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close