இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி... பும்ராவுக்கு ஊக்க மருந்து பரிசோதனை

  கிரிதரன்   | Last Modified : 03 Jun, 2019 09:26 pm
worldcupcricket2019-jasprit-bumrah-undergoes-doping-test

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு, இங்கிலாந்தில் இன்று ஊக்க மருந்து (டோப்பிங்) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மறுநாள் (ஜூன் 5) நடைபெறவுள்ள ஆட்டத்தில், இந்திய அணி. தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்காக, சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டனர்.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு அங்கு இன்று, ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவரது சிறுநீர் மற்றும் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த தகவலை உறுதி செய்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வேறு எந்தெந்த வீரர்களுக்கு இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதென்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு தற்செயலாக இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in


 

 

 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close