இலங்கை Vs ஆப்கன் : அடிப்பட்ட இருவரில் இன்று ஆறுதல் வெற்றி யாருக்கு?

  கிரிதரன்   | Last Modified : 03 Jun, 2019 11:04 pm
worldcupcricket-sri-lanka-vs-afghanistan-match-preview

 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் "ஒன்சைடு கேமாக" இருக்கக்கூடாது என்பதற்காக தான், பலவீனமான அணிகளையெல்லாம் இத்தொடரில் பங்கேற்க அனுமதிக்காமல்,  10 அணிகளை மட்டும் கொண்டு,  2019 ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் (ஜூன் 2) நடைபெற்ற போட்டிக்கு முந்தைய 4 போட்டிகளும் ஒன்சைடு கேம்களாகவே அமைந்துவிட்டன.

அதிலும் குறிப்பாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெறும் 136 ரன்களை மட்டும் எடுத்ததுடன் , 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஒன்சைடு கேமுக்கு  ஆகச் சிறந்த உதாரணமாக கூறலாம்.

இலங்கை அணியின் இந்த படுதோல்வியை ஒப்பிடும்போது, ஆஸ்திரேலிய அணியுடனான ஆப்கானிஸ்தான் அடைந்தது கௌரவமான தோல்வி எனச் சொல்லலாம்.
இந்த நிலையில், அடிப்பட்ட இரு எலிகள் இன்று கார்டிஃப், சோபியா கார்டன் மைதானத்தில் தங்களுக்குள் மோத உள்ளன.

மலிங்காவை மட்டும் பெரிதும் நம்பியுள்ள இலங்கை அணியின் பௌலிங்கை, ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திறம்பட சந்தித்தால், அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட வாய்ப்புண்டு.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வியை தழுவினால்,  இத்தொடரில் மீதமுள்ள போட்டிகளிலும் தோல்வி நிச்சயம் என்பது உறுதியாகிவிடும் என்பதால், எப்பாடுபட்டாவது ஆப்கனை வெற்றி கொள்ள இலங்கை அணி கடுமையாக முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை. இரு அணிகளின் பலம், பலவீனங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, இன்றைய போட்டியில் இலங்கை அணி வெல்லவே  வாய்ப்புகள் அதிகம்.

கார்டிஃப்பில் நாளை மாலை பொழுதில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல் தெரிவிப்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். அடிப்பட்ட இரு அணிகளில் இன்று ஆறுதல் வெற்றி பெறப்போகிறவர்கள் யார்?  வாங்க  மேட்ச் பார்க்கலாம்...

வி .ராமசுந்தரம் 

தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close