இலங்கை அணியை காப்பாற்றிய வருண பகவான்!

  கிரிதரன்   | Last Modified : 04 Jun, 2019 06:07 pm
srilanka-vs-afghanistan-cricket-match-stopped-due-to-rain

இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில் உள்ள சோஃபியா மைதானத்தில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, முதல் 18 ஓவர்களில் இலங்கை அணி சிறப்பாக பேட்டிங் செய்து வந்தது. ஆனால், அதன் பின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கின.

33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்து, இலங்கை அணி திணறிய கொண்டிருந்தது. இன்றைய போட்டியிலாவது அந்த அணி 50 ஓவர்களை முழுமையாக ஆடி  முடிக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வருண  பகவானின் கருணையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளதால்,  இலங்கை அணி ரசிகர்கள் அப்பாடா... என தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டுள்ளனர். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close