முதல் போட்டியில் முத்திரை பதிக்குமா இந்தியா ! ...ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா தென்னாப்பிரிக்கா?

  கிரிதரன்   | Last Modified : 04 Jun, 2019 11:28 pm
worldcupcricket2019-ind-vs-sa-match-preview

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட்  ரசிகர்கள் ஆவலுடன்  எதிர்பார்த்து கொண்டிருந்த அந்த நாள் இதோ வந்தேவிட்டது... ஆம்... இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில். இந்திய அணி இன்று தான் தனது முதல் ஆட்டத்தில் விளையாட உள்ளது. முதல் போட்டியிலேயே, அடிப்பட்ட சிங்கமான தென்னாப்பிரி்க்கா அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

சோதனை மேல்  சோதனை: உலகக்கோப்பைப் போட்டிகளில் பெரும்பாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தென்னாப்பிரிக்க அணிக்கு, நடப்பு உலகக்கோப்பை தொடர் சிறப்பான தொடக்கமாக அமையவில்லை.

 முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் படுதோல்வி... அந்த தோல்வி தந்த வலி மறைவதற்குள் வங்கதேசத்திடம் அடுத்த அடி... இதுபோதாதென்று, அணியின்  நட்சத்திர வேகபந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு, அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஹசிம் ஆம்லா இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா? இல்லையா? என இன்னமும் தெரியாது... 

ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளதால், ரவுண்ட் - ராபின் சுற்றில் மீதமுள்ள 7 போட்டிகளில், குறைந்தபட்சம் ஐந்து, அதிகபட்சம் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம்... மைதானத்தில் பறந்து பறந்து ஃபீல்டிங் செய்யும் ஜான்டி ரோஸ்ட் போன்றவர்கள் இருந்த அணியா இது? என கேட்கும் அளவுக்கு அணியின் ஃபீல்டிங்கும் மோசமாகவே உள்ளது... என இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே தான், தென்னாப்பிரிக்கா இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது.

ரபாடா, இம்ரான் தாஹிர்  போன்றவர்கள் பெளலிங்கிலும், கேட்பன் டுப்பிளசிஸ், விக்கெட் கீப்பர் டி காக், டும்னி, டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கிலும் ஏதாவது அதிசயங்களை நிகழ்த்தினால் மட்டுமே, தென்னாப்பிரிக்க அணி நெருக்கடியிலிருந்து வெளிவர வேண்டும்.

பேட்டிங், பௌலிங்கில் கெத்து: இந்திய அணியை பொருந்தவரை, இந்த உலகக்கோப்பையை வெல்வதற்கான தகுதி படைத்த அணிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், இந்த தொடரில் தான் விளையாடும் முதல் ஆட்டத்தை வெற்றி கணக்குடன்  தொடங்கும் முனைப்புடன் உள்ளதென்பதும்,  அந்த அளவுக்கு பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் கோலி அண்ட் கோ  "செம வெயிட்டாக" இருக்கிறதென்பதும் உண்மைதான்.

உலகக்கோப்பை போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தவான், இன்றைய போட்டியிலும் வெயிட் காட்டுவார் என எதிர்பார்க்கலாம். இருவருடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் சர்மாவும் கொஞ்ச நேரம் களத்தில் நின்றுவிட்டால், பின்னர் எதிரணிகளின் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிடுவார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். கேட்பன் விராட் கோலி, லோகேஷ்  ராகுல், கேதர் ஜாதவ், தல தோனி, ஹர்த்திக் பாண்டியா என, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மிக நீளம்.

பெளலிங்கை பொருத்தவரை, இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா,  பந்தை வேகமாக வீசுவது மட்டுமின்றி, யார்க்கர், ஸ்லோ பால், லெந்த் பால் என ஒரு ஓவரில் ஆறு பந்துகளை ஆறு விதமாக வீசும் வல்லமை படைத்தவராக திகழ்கிறார். எனவே அவர், இந்த உலகக்கோப்பை போட்டிகளில் நிச்சயம் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கலாம்.  அவருக்கு பக்கபலமாக  முகமது சமி, புவனேஷ் குமார், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் என அரை டஜன் பெளலர்களும் ரெடியாக உள்ளனர்.

பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் செம ஃபாமில் உள்ள தென்புடன் இந்தியா இன்று களமிறங்க உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளில் 6 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதும், கோலியின் டீமிக்கு பிளஸ் பாயிண்ட்.

டாஸ் : சௌத்தாம்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதாலும், அங்கு மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளதாலும், டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதுதான் சிறப்பு. முதலில் பேட்டிங் செய்யும் அணி, குறைந்தபட்சம் 320 ரன்களை எடுத்தால், எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கலாம்.

யாருக்கு வெற்றி? : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளின் பலம், பலவீனங்களை அலசி ஆராயும்போது, இன்றைய போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். ஓகே...மேட்ச் பார்க்க எல்லாரும் ரெடியா இருங்க...

வி .ராமசுந்தரம் 

தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close