சாஹல், பும்ரா அசத்தல் பவுலிங்: இந்தியாவுக்கு 228 ரன்கள் வெற்றி இலக்கு

  ராஜேஷ்.S   | Last Modified : 06 Jun, 2019 04:32 pm
world-cup-228-runs-target-india

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 228 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதனாத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்ளஸ்சி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லா, டி காக் களமிறங்கினார்கள்.

4-ஆவது ஆம்லா, 6-ஆவது ஓவரில் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் பும்ரா. இதன்பிறகு, கேப்டன் டூப்ளஸ்சி, வாண்டர் டஸ்ஸன்  நிதனமாக விளையாடி வந்தனர்.  டஸ்ஸன் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாஹல் அவரை போல்ட் ஆக்கினார். அதே ஓவரில்,  டூப்ளஸ்சி போல்ட் செய்து கெத்து காட்டினார் சாஹல்.  அப்போது அணியின் ஸ்கோர் 20 ஓவர்களுக்கு 80/4 என இருந்தது.

டுமினி 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் வந்த வேகத்திலேயே வெளியேறினார். பின்னர், மில்லர், ஆண்டிலி கூட்டு சேர்ந்து ஓரளவிற்கு அணியின் ஸ்கோர் உயர்த்தி வந்த நிலையில், மில்லரை 31 ரன்னில்  போல்ட் ஆக்கியும், ஆண்டிலியை 34 ரன்னில் அவுட் ஆக்கியும் மீண்டும் அசத்தினார் சாஹல். இவர்கள் சென்றபோது, அணி 40 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பின்னர், மோரிஸ், ரபடா ஜோடி அணி டீசண்ட்டான ஸ்கோர் எடுக்க உதவினார்கள். கடைசி ஓவரில் மோரிஸ், இம்ரான் தாஹீரின் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்து, இந்திய அணி வெற்றி பெற 228 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 31 ரன்கள் எடுத்த ரபடா ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிகபட்சமாக மோரிஸ் 42, டூப்ளஸ்சி 38, ரபடா 31 ரன்கள் எடுத்தனர். இந்திய பவுலர்கள் வீழ்த்திய விக்கெட்டுகள்: சாஹல் 4/ 51, பும்ரா 2/35, புவனேஷ்வர் குமார் 2/44.

தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close