இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 11:39 pm
rajnath-amit-shah-wishes-indian-cricket-team-for-their-win-against-south-africa

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவங்கிய இந்திய அணிக்கு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு, மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். வெற்றிக் கணக்கை துவங்கிய இந்திய அணிக்கு வாழ்த்து என பதிவிட்டுள்ள அவர், இந்த வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார். 

அதே போல், சஹால், பும்ரா, ரோஹித் சர்மா ஆகியோரை வெகுவாக பாராட்டியுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அணியின் ஒட்டு மொத்த கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக பாராட்டியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close