சரிவிலிருந்து ஆஸி.,யை மீட்ட ஸ்மித், நைல்: மேற்கிந்திய தீவுகளுக்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 07:43 pm
worldcup-australia-289-runs-target-westindies

உலகக்கோப்பை தொடரில், மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற 289 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

நாட்டிங்காமில் தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக வார்னர், பின்ச் களமிறங்கினார்கள். இருவரும் அடுத்தடுத்து ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் 79 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறியது. பின்னர், ஸ்மித், அலெக்ஸ் கேரி, கோல்டர் நைல் அணியை சரிவிலிருந்து மீட்டனர். 6-ஆவது  விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்மித், கேரி நிலையாக நின்று ஆடினர். 45 எடுத்திருந்த நிலையில், கேரி, ரஸ்ஸல் பந்துவீச்சில் அவுட்டானார். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்தது. 

இதையடுத்து களமிறங்கிய கோல்டர் நைல், மேற்கிந்திய தீவுகள் பவுலர்களின் பந்துவீச்சை சராமரியாக விளாசினார். இதனிடையே, நீண்ட இடைவெளிக்கு ஒருநாள் போட்டிக்கு திரும்பிய ஸ்மித்தும் அரைசதம் அடித்து அசத்தினார்.  இவரைத்தொடர்ந்து நைல்லும் அரைசதம் அடித்தார்.
ஸ்மித்73 ரன்களில்  தாமஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்மித் கொடுத்த கேட்ச்சை பவுண்டரி லைனில் இருந்த கோட்ரெல் அபாரமாக பிடித்தார். தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த நைல், ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்ய தவறவிட்டார். 60 பாலில்  92 ரன்கள் எடுத்திருந்தபோது, ப்ரத்வெயிட் பாலில் ஹோல்டரின் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

இறுதியில்,  ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 288 ரன்கள் எடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி இலக்காக 289 ரன்களை நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக நைல் 92, ஸ்மித் 73, கேரி 45 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ப்ரத்வெயிட் 3, தாமஸ், கோட்ரெல், ரஸ்ஸல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 289 என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்து வருகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close